பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



78 நல்வழிச் சிறுகதைகள்

ஓர் எலிக்கு ஒரு பணம் வீதம் சின்னத்தம்பி கொல்லும் எலிகளுக்குப் பணம் எண்ணிக் கொடுப்பார்கள்.

சின்னத்தம்பிக்கு எலி வேட்டையில் மேல்வரும் படி கிடைத்து வந்தது. இதனால் அவன் அந்தத் தொழிலைக் கடைசிவரையில் விடாமல் நடத்தி வந்தான்.

அந்த ஊருக்குப் பக்கத்தில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு புலி இருந்தது. அது ஒரு முறை தற்செயலாக ஊருக்குள் வந்தது. ஊரில் ஒரு குடிசைக்குப் பின்னால் மரத்தடியில் கட்டிக் கிடந்த ஆட்டை அடித்துக் கொன்று தின்று விட்டது. பிறகு அந்தப் புலி நாள்தோறும் வந்தது. வெட்ட வெளிகளிலும், தோட்டங்களிலும் கட்டிக் கிடந்த ஆடு மாடுகள் அதற்குப் பலியாகிக் கொண்டு வந்தன.

புலியின் கொடுமையை ஊர் மக்களால் தாங்க முடியவில்லை. எலி பிடிக்கும் சின்னத்தம்பியிடம் சிலர், "நீ அந்தப் புலியைப் பிடித்து ஊர் மக்கள் தொல்லையைத் தீர்த்தால் என்ன ?” என்று கேட்டார்கள்.

“எனக்கு எலி பிடிக்கத்தான் தெரியும். புலி பிடிக்கத் தெரியாது!” என்று சின்னத்தம்பி சொல்லி விட்டான். இந்தப் புலியைக் கொன்று ஊரைக் காப்பாற்றக் கூடிய ஆள் நம் ஊரில் இல்லையே!” என்று மக்கள் கலங்கினார்கள்.