பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24 நல்வழிச் சிறுகதைகள்

விளையாட்டைத் துவங்கி விட்டால் பகைவர்கள் பதறியோடுவார்கள்.

திருமாவலி சிறந்த போர் வீரனாக இருந்த தோடு, இறைபக்தி மிக்கவனாகவும் இருந்தான். தொடுத்த போரிலெல்லாம் அவன் வெற்றி வாகையைப் பெற்று வர- அவனுடைய பலம் காரணமா ? பக்தி காரணமா ? என்று சொல்ல முடியாமல் இருந்தது.

ஒரு முறை தன் மனைவிக்கு நோய் வந்தபோது, இறைவனுடைய திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வதாக திருமாவலி நேர்ந்து கொண்டான். மனைவி பிழைத்தெழுந்து பல நாட்களான பின்னும், அந்நேர்த்திக் கடன் செலுத்தப்படாமலே இருந்து வந்தது.

ஒரு நாள் அவன் மன்னரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தன் தல யாத்திரையைத் துவக்கினான்.

திருமாவலி தல யாத்திரை துவங்கிய செய்தியை ஒற்றர்கள் மூலம் சேர மன்னன் அறிந்தான். சேர மன்னன் திருமாவலியின் மேல் ஆத்திரங் கொண்டிருந்தான். ஏனெனில், திருமாவலியின் தலைமையில் வந்த படைதான், சேர நாட்டைப் பாண்டிய நாட்டுக்கு அடிமைப்படுத்தியது. பாண்டிய நாட்டை வெல்லக் கூடிய படைபலம் இல்லாததால், மீண்டும் போர் புரிந்து நாட்டை மீட்கக் கூடிய சக்தி சேரனுக்கு அப்போது இல்லை. ஆனால், தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள,