பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நல்லவர் நமசிவாயம்

மதுரையில் கண்ணன் என்று ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெற்றோர் மிகுந்த ஏழைகள். அதனால் அவர்கள் அவனைப் படிக்க வைக்கவும் இல்லை; அவனுக்குப் பணம் சேர்த்து வைக்கவும் இல்லை.

பெற்றோர் இருந்தபோது கண்ணன் எங்காவது கூலி வேலை செய்து, கிடைத்த பணத்தை அவர்களிடம் கொண்டு வந்து கொடுப்பான். அது அவர்கள் வீட்டுச் செலவுக்குப் பயன்படும். அவர்கள் குடும்பத்தில் ஏழ்மையினால் ஏற்பட்ட துன்பத்தைச் சிறிது குறைக்க அவனுடைய பணம் உதவியாக இருந்தது.

பெற்றோர் இறந்த பிறகு, கண்ணன் தனக்குச் கிடைத்த கூலியை நண்பர்கள் சிலரோடு சேர்ந்து உண்ணுவதிலும், ஊர் சுற்றிச் செலவழிப்பதிலுமாகக் கரைத்து வந்தான். அதனால் அவன் கையில் எப்போதும் காசு மீந்திருப்பதில்லை. அன்றன்று சாப்பாட்டுக்கு அவன் உழைத்தே பிழைக்கவேண்டியிருந்தது.