பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 29

வளருங்கள் ! பாண்டிய நாடு வாழ்க!” என்று கூறிக் கொண்டே திருமாவலி கண்ணை மூடினான். அவனுடைய கடைசி மூச்சு அந்தப் பேச்சோடு நின்று விட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பாண்டிய மன்னன் கேள்விப்பட்டான்.

பகைவர்கள் யார் என்று தெரியாததால், எதுவும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால், திருமாவலியின் குடும்பத்துக்கு வீர மானியங்களும், அவன் பிள்ளைகளுக்கு வீர விருதுகளும் வழங்கிச் சிறப்பித்தான்.

கருத்துரை:- மானத்தைப் பெரிதாக மதிக்கும் வீரர்கள்எக்காலத்திலும் பகைவருக்குப் பணிய மாட்டார்கள்.