பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



34 . நல்வழிச் சிறுகதைகள்

ஆனால் திண்ணன் இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருநாள், பஞ்சப்பன் ஏதோ தவறு செய்து விட்டான். அந்தத் தவறு திண்ணனுக்குப் பெரிதாகப் பட்டது. அதனால் கோபமடைந்த திண்ணன், பஞ்சப்பனைத் தன் வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டான்.

பஞ்சப்பனும் திண்ணனுடைய கோபத்தைப் பொறுக்க முடியாமல் ஒடி விட்டான். அவன் போனது பற்றித் திண்ணன் சிறிதுகூடக் கவலைப்படவில்லை. தனக்கு ஒரு மெய்க் காப்பாளன் போலவும், சிறந்த அமைச்சன் போலவும் விளங்கிய ஒருவனை விரட்டி விட்டோமே என்று அவன் சிறிதுகூட எண்ணிப் பார்க்கவில்லை.

பஞ்சப்பன் போன பிறகு, அயலூரிலிருந்து வல்லவன்பட்டினத்துக்கு ஒரு பயில்வான் வந்திருந்தான். அவன் தன்னுடன் போட்டிக்கு வரத் திண்ணன் ஆயத்தமா? என்று சவால் விட்டழைத்தான். எந்த சவாலையும் திண்ணன் மறுத்துத் தள்ளியதில்லை.

மற்போர் நடைபெற ஏற்பாடாயிற்று. ஊர்ப் பொதுவெளியில் போட்டி நடந்தது. நூற்றுக் கணக்காண மக்கள் போட்டி காணக் குழுமியிருந்தார்கள்.

அயலூர்ப் பயில்வானும், திண்ணனும் அந்த மல்லரங்கில் வந்து நின்றது இரண்டு பெரிய யானைகள் ஒன்றோடொன்று மோதிச் சண்டையிடமுனைந்து நிற்பது போல் இருந்தது.