பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 67

கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி, உலகநீதி முதலிய நீதிநூல்களை மனப்பாடம் செய்திருந்தான்.

அதற்கு மேல் அவனுக்கு இலக்கணப் பயிற்சியோ, இலக்கியப் பயிற்சியோ கிடையாது.

அவன் பேசும் வாசகமெல்லாம் கவிதையாக வெளி வருகிறது என்று நண்பன் வேடிக்கையாகப் பாராட்டிக் கூறியதை அவன் உண்மையாகவே எடுத்துக் கொண்டான். அன்று முதல் அவன் எழுத்தாணியும் ஒலையும் எடுத்துக் கொண்டு திரிந்தான் ஒய்வுள்ள போதெல்லாம் ஏதாவது சில வரிகளை ஒலையில் எழுதிக் கொண்டிருந்தான்.

எழுத எழுதப் பனையோலைகள் குவிந்தன. எழுதிய ஒலைகளின் எண்ணிக்கை நாள் ஆக ஆகப் பெருகியது.

நான்கு நான்கு அடியாக, ஏறக்குறைய ஆயிரம் கவிதைகளுக்கு மேல் அவன் எழுதி விட்டான். ஒரு நாள் அவன்தன் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்தான்.

தான் எழுதிய ஒலைகளை அவர்கள் முன் பெருமையோடு விரித்து வைத்தான். சிந்தித்துச் சிந்தித்து அலங்காரமாக அவன் எழுதியிருந்த அந்தக் கவிதைகளை நண்பர்கள் படித்துப் பார்த்தார்கள். அவர்களும் முத்துவடுகநாதன் படித்த பள்ளிக் கூடத்திலே படித்தவர்கள்தாம்.

அவர்கள் முத்துவடுகநாதனை ஒரேயடியாகப் புகழத் தொடங்கிவிட்டார்கள். “நண்பா, நீ எங்க