பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



38 நல்வழிச் சிறுகதைகள்

ஒவ்வொரு நாட்டிலும் தாம் அடைந்த வெற்றியை நினைக்க நினைக்க, அவருக்குத் தற்பெருமை மிகுந்தது. தனக்கு மிஞ்சிய அறிவாளி இந்த உலகத்திலேயே இல்லை என்று எண்ணிக் கொண்டார். இந்த எண்ணம் வலுப்பெற்ற பின், அவர் மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொள்ளத் தொடங்கினார்.

சோழ நாட்டில் வாதியற்றி வென்ற பின், பாண்டிய நாடு வந்திருந்தார். பாண்டிய நாட்டுக்குப் பின் சேர நாட்டுக்குச் சென்று, தம் வெற்றியை நிலைநாட்டி விட்டுக் கன்னியாகுமரியில் கடலாடித் திரும்புவதென்று முடிவு கட்டியிருந்தார்.

மதுரை நகருக்கு அவர் வந்து சேர்ந்தபோது, நகரெங்கும் அவரைப் பற்றியே பேச்சாக இருந்தது. ``பரத கண்டத்துப் பேரறிஞர்; பல்கலையும் வல்ல புலவர் : காசித் தலத்துக் கவிஞர் ; அறிஞர் அரிசங்கரர் வந்திருக்கிறார் ! அவரை வாதில் வெல்லயாராலும் முடியாதாம். சங்கத்திலே தங்கத் தமிழாயும் சிங்கப் புலவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் ? என்றெல்லாம் மக்கள் பேசிக் கொண்டார்கள்.

புலவர்களுக்குச் சிறப்பளித்து வரவேற்கும் பாண்டிய மன்னன், அரிசங்கரரை வரவேற்றுப் பெருமைப்படுத்தினான். அரசவைக்கு வந்த அரிசங்கரர், தம் பெருமைகளை அரசனுக்கு எடுத்துக் கூறினார். தாம் நாடு தோறும் சுற்றிவரும் காரணத்தை விளக்கிச் சொன்னார். தம்முடன்