இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மேடை மீதில் ஏறித்
தாளத் தோடே ஆடி
பாடல் கருத்தை நெஞ்சில்
பதிய வைப்போம் வாடி!
ஆட ஆட இன்பம்
ஆட வாடி தங்கம்!
காலில் சலங்கை குலுங்க
கையை நீட்டி வளைத்து
மேலும் மேலும் குதித்து
மின்னல் போல நடித்தே
ஆட ஆட இன்பம்
ஆட வாடி, தங்கம்!