பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீர்ப்பாம்பும் நாகப்பாம்பும்

ர் ஏரியில் நீர்ப்பாம்பு ஒன்று வசித்து வந்தது. அது சில சமயங்களில் ஏரியை அடுத்தாற் போலிருந்த புல் தரைக்கு வரும். சிறிது நேரம் புற்களின் ஊடே ஊர்ந்து சென்று காற்று குடிக்கும். பிறகு ஏரிக்குத் திரும்பி வரும்.

ஒரு நாள் புல் வெளியில் அது ஊர்ந்து செல்லும் போது, எதிரில் ஒரு நாகப்பாம்பைக் கண்டது. ஒன்றையொன்று சந்தித்தவுடன் இரண்டும் அன்பாகப் பேசிக் கொண்டன. நலம் விசாரித்துக் கொண்டன. அப்போது தூரத்தில் இருந்த மூங்கில்களின் ஊடே காற்று மோதியதால் இனிய ஓசையெழுந்தது. அந்த இன்னோசையைக் கேட்டவுடன், நாகப் பாம்புக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்பத்தின் எக்களிப்பில் அது படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. அதன் அழகிய ஆட்டத்தைக் கண்கொட்டாது பார்த்து நீர்ப்பாம்பும் மகிழ்ந்தது.

அன்று முதல் அவையிரண்டும் நட்பினராகி விட்டன. அடிக்கடி ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டன. பேசிக்கொண்டே ஒன்றாக ஊர்ந்து பல இடங்களுக்குச் சென்றன.

ஒரு நாள் அவையிரண்டும் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஓர் ஒற்றையடிப்