பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாரா. நாச்சியப்பன் 51

அவர் மீண்டும் பழைய நிலைவந்து விட்டார். நாணயமும் நேர்மையும் அவருடைய வேகமான முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்தன. அல்லவா ! என்னால் முடிந்தவரை உங்களுக்கு உதவியாயிருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு இருக்கிறேன்!” என்றான் மாணிக்கம்.

அதைக் கேட்ட சாத்தப்பருக்குக் கண்களில் நீர் தளும்பியது.

“தம்பி மாணிக்கம், நீதான் என் உண்மையான உறவினன். துன்பத்திலும் துணையாக நிற்கும். நீதான் என் அன்புக்குரிய உறவினன்!” என்று உணர்ச்சியோடு கூறினார்.

பிறகு தம் மாளிகையை விற்றுக் கிடைத்த பணத்தைக் கொண்டு மீண்டும் முத்து வாணிபம் செய்தார். மிக விரைவில் அவர் மீண்டும் பழைய நிலைவந்து விட்டார். நாணயமும் நேர்மையும் அவருடைய வேகமான முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்தன.

மாணிக்கம் கடைசிவரை அவரை விட்டு நீங்கவில்லை. அவரும் கடைசிவரை மாணிக்கத்தைத் தம் கூடவே வைத்துக்கொண்டார். சமையல் வேலையில் மட்டுமல்லாமல், முத்து வாணிகத்திலும் அவருக்குத் துணையாயிருந்தான் மாணிக்கம்.

புதிய செல்வத்தைக் கொண்டு, சாத்தப்பர் இரண்டு மாளிகைகள் கட்டினார். ஒன்று, அவருக்கு: மற்றொன்று, மாணிக்கத்துக்கு.

கருத்துரை:- ஒருவன் துன்பமுற்ற காலத்தில் அவனை விட்டு ஓடிப் போவோர் உண்மையான உறவினர் ஆகார். எக்காலத்திலும் கூட இருப்பவர்களே உண்மை உறவினராவர்.