இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மதி அமைச்சரே மதி அமைச்சரே
மாதம் மும்மழை பொழிந்ததா?
விதி முறைப்படி அந்தண ரெல்லாம்
வேதம் ஓதுகின் றாரா?
மதி அமைச்சரே மதி அமைச்சரே
மடையில் மீன்கள் துள்ளுதா?
புதிய பயிர்கள் செழித்து வளர்ந்து
பொருள் விலைகள் குறைந்ததா?
மதி அமைச்சரே மதி அமைச்சரே
மக்கள் கல்வி வளர்ந்ததா?
மடமை தொலையக் கடமை யாற்றி
உடைமை கொண்டு மகிழ்ந்ததா?