பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

"அரசே! இவர் இருப்புச் சட்டியைத் தொடாமலே வந்திருக்கிறார். அதனால்தான் இருப்புச்சட்டி குதிக்கவில்லை; கூச்சல் போடவில்லை" என்றான்.

"இந்தக் குடியானவன் பொய் சொல்கிறான். நான் தொட்டேன்" என்றான் அந்த ஆள்.

"சரி, மறுபடி தொடு பார்க்கலாம்" என்றான் அறிவாளன்.

அவன் தயங்கினான். பிறகு உண்மையை ஒப்புக் கொண்டான்.

அரசன் பூவேந்தனுக்கு இருப்புச் சட்டி குதிப்பதைப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.

திருடியதாக ஒப்புக் கொண்ட ஆளை இருப்புச் சட்டியைப் போய்த் தொடும்படி ஆணையிட்டான்.

அவன் இருப்புச் சட்டி என்ன தண்டனை கொடுக்குமோ என்று பயந்தான். '"வேண்டாம் அரசே, நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். அதைத் தொட வேண்டாம்" என்று வேண்டிக் கொண்டான்.

"அறிவாளரே, இவன் இருப்புச் சட்டியைத் தொடவில்லை என்பதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?" என்று பூவேந்தன் ஆர்வத்தோடு கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/23&oldid=1165201" இலிருந்து மீள்விக்கப்பட்டது