பக்கம்:நிலாப்பாட்டி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செய்யப்போவதை நினைத்துப் பெருமை அடைந்தாள்.

அவள் கடவுளைக் கும்பிட்டுவிட்டு உண்டியில் தங்கக் காசைப் போடுவதை அரசனுடைய ஆட்கள் கண்டுகொண்டார்கள். அதை அவர்கள் உடனே அரசனிடம் தெரிவித்தார்கள். அரசன் இதைக் கேட்டு மேலும் ஆச்சரியமடைந்தான். நிலாப்பாட்டியைச் சந்தித்து அவளைப்பற்றி முழு விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

இந்த அரசன் மிகவும் நல்லவன். மக்களிடத்தில் அன்புடையவன். சிறந்த வீரன். அவன் சின்னக் குழந்தையாக இருந்தபோது அவனுடைய தந்தை அரசாட்சி செய்து வந்தார். அப்போது பகைவர்கள் அந்த ஊரையும் கோட்டையையும் திடீரென்று எதிர்த்து வந்து தாக்கினார்கள். தந்தையால் பகைவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. ஏனென்றால், பகைவர்களுடைய சேனை மிகப் பெரியதாக இருந்தது. அதனால் அவனுடைய தந்தை வீரத்தோடு சண்டை செய்தும் பயனில்லாமற் போயிற்று. அவர் உடம்பில் பல இடங்களில் காயமடைந்து போர்க்களத்திலேயே இறந்து போனார். பகைவர்கள் கோட்டையைப் பிடித்துக்கொண்டார்கள். ஆனால், சின்னக் குழந்தையாக இருந்த இந்த அரசன் அவர்களிடம் சிக்கவில்லை. யாரோ சில பேர் அவனை இரகசியமாக அந்த ஊரிலிருந்து எடுத்துக்கொண்டு போய், வேறு யாருக்கும்

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/21&oldid=1117039" இலிருந்து மீள்விக்கப்பட்டது