பக்கம்:நிலாப்பாட்டி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தப் பேச்சைக் கேட்டிருக்கிறான். ஆனால் இது, வரையில் அந்தப் பொருள்கள் எங்கிருக்கின்றன என்று யாருக்கும் தெரியவில்லை. குருவியின் உதவியால் அவை இப்பொழுது அரசனுக்கே கிடைத்துவிட்டன.

அதைக்கொண்டு ஏரியுண்டாக்க அரசன் உடனே ஏற்பாடு செய்தான். அதற்கு "நிலாப் பாட்டி ஏரி" என்று பெயரிட வேண்டுமென்றும் முடிவு செய்தான். நிலாப்பாட்டியை அரசன் வெகுவாகப் புகழ்ந்ததோடு அவளை அரண்மனையிலேயே வந்திருக்கும்படியாகக் கேட்டுக்கொண்டான், ஆனால், நிலாப்பாட்டி தனது குடிசையை விட்டுப் போக இசையவில்லை. “இந்தக் குருவியும் நானும் இங்கேயே சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுக்குப் பெரிய வீடு எதற்கு?” என்று அவள் கூறிவிட்டாள். நிலாப்பாட்டியின் வசதிக்காகவும் உணவிற்காகவும் அரசன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்தான். குருவிக்கு இப்பொழுது ஒரே மகிழ்ச்சி. இனிமை இனிமையாகப் பாடிக் கொண்டே இருந்தது.

அந்த ஊர் மக்களுக்கு நிலாப்பாட்டியைப் பற்றி நன்றாகத் தெரிந்து விட்டது. அதனால் பல பேர் ஒவ்வொரு நாளும் அவளைப் பார்த்துப் பேசவும், அவளுக்கு வணக்கம் தெரிவிக்கவும் வரத் தொடங்கினார்கள்.

— — —
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/28&oldid=1122033" இலிருந்து மீள்விக்கப்பட்டது