பக்கம்:நிலாப்பாட்டி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விட்டது. குருவி தனக்கு எங்கிருந்தோ தங்கக் காசு கொண்டுவந்து கொடுக்கிறதையும், அதை அவள் தனக்காக வைத்துக்கொள்ளாமல் உண்டியில் போடுவதையும் அரசனுக்குத் தெளிவாகக் கூறினாள்.

அரசனுக்கு உண்டான ஆச்சரியத்தைச் சொல்ல முடியாது. அவன் நிலாப்பாட்டியை மரியாதையோடும் அன்போடும் பார்த்துக் கொண்டு நின்றன். அந்த வேளையில், வெளியே போயிருந்த குருவி, தன்னுடைய மூக்கில் ஒரு தங்கக் காசைக் கொண்டுவந்து நிலாப்பாட்டியின் முன்னால் வைப்பதையும் அவன் பார்த்தான். கிழவி சொல்வது உண்மை என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/24&oldid=1117043" இலிருந்து மீள்விக்கப்பட்டது