பக்கம்:கடவுள் பாட்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

உண்ணும் உணவை மண்ணுக்குள்
ஒளித்து வைத்த பெருமானே
எண்ணங் கொண்ட உடன்பருக
எளிதில் நீரை மேல்வைத்தாய்
கண்ணிற் காணாக் காற்றினையோ
கனிவோ டெங்கும் பரந்திருக்கப்
பண்ணி வைத்தாய் உன்கருணை
பகர்தற் கெளிதோ பெருமானே!

14


அறத்தைப் பொருளை இன்பத்தை
அழியா வீட்டைத் தந்தருளும்
திறத்தை யுடைய திருமறையைத்
திருவாய் மலர்ந்த பெருமானே!
வெறுத்தல் இன்றி எனைக்காக்க
விரைந்து வந்த குருதேவா!
ஒறுத்த போதும் என்னறிவை
உயரச் செய்வாய் அறிவாளா!

15


காசுக் காக உழைத்துழைத்துக்
காலங் கழித்தேன் பெருமானே
காசு வந்து சேரவிலை
காலச் சுழற்சி நிற்கவிலை
ஈசன் உன்தாள் பற்றுதலே
இனிஎன் கடமை எனக்கொண்டேன்
காசு துரசாய்ப் போயிற்றுன்
கடைக்கண் ஒளியின் முன்னாலே!

16


ஆசை என்னும் பேயென்னை
அலைக்க ழிக்கும் போதுமணி
ஒசை யோடு நீவருவாய்
ஒடிப் போகும் அப்பேயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/13&oldid=1201933" இலிருந்து மீள்விக்கப்பட்டது