பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாய்மொழி பேசாத நாய்க் குட்டி

அழகான நாய்க்குட்டி ஒன்று இருந்தது. அதன் உடம்பெல்லாம் ஒரே வெள்ளை நிறம். காதில் மட்டும், கறுப்பு நிறம். அது வாலைக் குழைத்துக்கொண்டு ஓடுவதைப் பார்க்கும்போது அதன் தாய்க்கு மிகவும் பெருமையாக இருந்தது.

அந்த நாய்க்குட்டிக்கு அன்போடு பால் கொடுத்து, அதன் தாய் செல்லமாக வளர்த்து வந்தது. அந்தக் குட்டியைத் தன்னைப் போலவே உறுமவும், குரைக்கவும் கற்றுக் கொடுத்தால் யாரும் அதை விரும்புவார்கள் என்பது தாயின் எண்ணம்.

யாராவது புதிதாக வெளி, வாயில்பக்கம் வரும் போதே தாய் ‘உர்’ என்று உறுமிக்கொண்டு வாயிலை நோக்கிச் செல்லும். குட்டியும் அதனேடு ஓடும். அதுவும் தன்னைப் போலவே ‘உர்’ என்று உறும வேண்டும் என்பது தாயின் ஆசை. ஆனால், அந்தக் குட்டி அப்படி உறும விரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/28&oldid=1090598" இலிருந்து மீள்விக்கப்பட்டது