பக்கம்:கடவுள் பாட்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

முன்னம் பருத்த கொங்கையினை
முகத்தின் அழகைக் காட்டிவரும்
அன்னம் அனைய பிற மாதர்
ஆசை விலக்கி எனைக்காப்பாய்!

52

ஐயா உன்றன் அருள்வேண்டி
அலைவார் திரிவார் ஊரூராய்
மெய்யில் எங்கும் வேல்பாய்ச்சி
வீதி முற்றும் புரண்டெழுவார்
தைய லிட்டு வாய்மூடித்
தணலில் இறங்கி நடந்திடுவார்
செய்யற் குரிய தல்லாத
செய்யும் இவரைத் திருத்தாயோ?

53


குறிகள் இட்டுத் திரிந்தால்தான்
கும்பிட் டதற்குச் சான்றாமோ
நெறிகள் விலகிச் செல்லாமல்
நின்றால் அதுவே போதாதோ
பொறிகள் ஐந்தும் தம்வழியே
போக விட்டுப் பின்னாலே
குறிகள் இட்டுக் கொண்டுவிட்டால்
கும்பிட் டெழுந்த பலன்வருமோ?

54


கண்ணால் உன்னைக் காணவிலை
கையால் தொட்டுப் பார்க்கவிலை
எண்ணா திருக்கும் போதோநீ
இருப்ப தாகத் தோன்றவிலை
எண்ணித் தொழுமப் பொழுதெல்லாம்
எங்கோ தங்கி இருந்தபடி
மண்ணை ஆட்டும் வண்ண மெலாம்
மனத்த கத்தே கானு கிறேன்.

55
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/24&oldid=1201916" இலிருந்து மீள்விக்கப்பட்டது