பக்கம்:கடவுள் பாட்டு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35



அம்மை என்பார் சிலருன்னை
அப்பன் என்பார் சிலருன்னை
அம்மை யப்பன் என்றுசிலர்
அழைப்பார் உன்னைப் பெருமானே
எம்மைப் படைத்த நீதானே
எங்கள் பெற்றோர் அவர் பெற்றோர்
தம்மை யெல்லாம் படைத்தாய்உன்
தன்னை எவ்வா றழைப்பதுவோ?

98

கண்ட தில்லை எனக்கூறிக்
கடவுள் இல்லை என்பார்க்கும்
உண்டிங் கொருவன் என நம்பும்
உறுதி கொண்டு நிற்பார்க்கும்
கண்டு கொள்ள வேண்டுமெனக்
காட்சி கொடுத்த தில்லைநீ
மண்டும் அன்பால் எனக்கேந்
மகிழ்ந்து காட்சி கொடுத்தாயே.

99

உள்ளம் உருக மெய்யுருக
உள்ளெ லும்பும் தானுருகக்
கள்ள மின்றி உன்னடியைக்
கட்டிக் கொண்டு தொழுதேன்நான்
வெள்ளக் கருணைத் திறத்தாலே
வேண்டும் வாழ்வைக் கொடுத்தாய்நீ
தெள்ளத் தெளிந்த ஆரமுதே
தேனின் இனிய பெருமானே.

100


பிறந்து மாயும் வாழ்வினிலே
பெருமா நானும் சலிப்புற்றேன்
பிறவா திறவா தொருநிலையில்
பணி என்னைக் காத்திடுவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/37&oldid=1202035" இலிருந்து மீள்விக்கப்பட்டது