பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பூனையாரே பூனையாரே
என்ன செய்கிறீர்?

பொந்துக்குள்ளே போன எலியைப்
பிடிக்கப் பார்க்கிறேன்

பூனையாரே பூனையாரே
என்ன செய்கிறீர்?

பிடியைத்தப்பிப் போன எலியைத்
தேடிப் பார்க்கிறேன்

பூனையாரே பூனையாரே
என்ன செய்கிறீர்?

போன எலியும் திரும்புகின்ற
நேரம் பார்க்கிறேன்

பூனையாரே பூனையாரே
என்ன செய்கிறீர்?

பார்த்த கண்ணும் பூத்துப்போச்சு
தூங்கப் பார்க்கிறேன்.

8