பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தமிழ் வளர்கிறது!


வருவாளை வராளென் றெழுது வோனும்
வருவானோ ரெழுத்தாளன் என்று கூறி !
திருவான தமிழேடு தெருவில் வந்தால்
செழித்தோங்கும் எனநம்பி வழிதி றந்தோம்.
தெருவீதிப் புழுதியெலாம் பறந்து வந்து
திருவீட்டில் நுழைந்துதமிழ் ஏட்டி லேறி
உருவான தமிழொளியை மறைக்கக் கண்டோம் !
உடன்புழுதி துடைப்பதற்கோர் இயக்கம் வேண்டும்!

ஆங்கிலத்தைத் தமிழ்மொழியில் கலப்ப தாலே
அறிவுயரும் மொழிவளரும் நாட்டிற் கென்றும்
தீங்கிலையே எனமொழிவார்; தமிழில் எங்கும்
செஞ்சொற்கள் இலையென்றும் கூறி நிற்பார்.
தேங்கியுள்ள சாக்கடையின் தண்ணீ ராலே
தேனாற்றில் பெருக்கெடுத்த தென்பார் போலே
பாங்கிலுள்ள வடமொழியும் சொற்கள் தந்து
பழந்தமிழை வளர்த்ததுவே சான்றா மென்பார் !

கற்கண்டைக் கடியாமல் விழுங்கிப் பல்லைக்
காப்பாற்ற வேண்டுமென்றும். அதனைப் போலே
கற்கண்டைக் கல்க்கண்டென் றெழுதி னாற்றான்
கடுந்தமிழைப் புரிந்துகொள்ள முடியு மென்றும்
சொற்களிலே எளிமையினைத் தோற்று விக்கத்
தோன்றிவந்தோம் நாமென்று சொல்லிக் கொண்டு
முற்கழகப் புலவர்தமை மூட ராக்கி
முன்னேறும் புதுப்புலவர் பல்லோர் வந்தார்!