இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுண்டாச் சட்டியில் என்றன் வீட்டில்
சோறு வேகுதம்மா
குண்டா என்றொரு கிளிஞ்சல் நிறையக்
குழம்பும் ஆகுதம்மா
கடைக்குப் போன பையனை இன்னும்
காண வில்லையே
வடைக்கு மணலை ஊற வைத்துளேன்
மாவும் அரைக்கவேணும்
பள்ளிக் கூடம் செல்லத் தம்பி
பறந்து வந்திடுவான்
வெள்ளித் தட்டில் அவனுக் குணவு
வேகமாய்ப் போடுமுன்னால்
எத்தனை வேலை என்று கூறிட
எனக்கு நேரமெங்கே?
இத்தனைக் கிடையில் கத்தும் குழந்தைக்கு
என்னதான் செய்வதம்மா?
7