பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழர் திருநாள் கீழ்ச்செயல்கட் கஞ்சாத பகைவர் தங்கள் கெடுதல்செயும் கினைப்பினையும் செயலில் அன்ஞர் சூழ்ச்சிசெயும் திறத்தினையும் கண்ட மக்கள் உளங்கொதித்தார், வெகுண்டெழுந்தார், ஊரி லெல்லாம் வீழ்ச்சியுற்ற தமிழர்நிலை விளக்கிக் காட்டி வீணான வேற்றுமைகள் விலக்கச் சொல்லி சூழ்ச்சிதன்னை வஞ்சகத்தைப் பொருமை தன்னைத் துள்துாளாய்த் தொலைப்பதற்குத் துவங்கி விட்டார்! பகைவர்களை எச்சரிக்கும் ஒருநா ளாகப் பாண்டியரின் வழிவந்த தமிழ மக்கள் மிகையான மகிழ்ச்சியிலே திளைத்தி ருக்கும் மேலான ஒருநாளா யிலங்கு கின்ற; வகைவகையாய்த் தானியங்கள், கரும்பு மஞ்சள் வண்டிவண்டி யாய்க்குவியும் வளங்க ளார்ந்த வகைசெய்யும் நன்னளைப் பொங்கல் நாளை வாழ்த்தியவர் திருநாளாய்க் கொள்ள லானர் ! கழகங்கள் பலவமைத்தார் செயல்க ளாற்றக் கடிதிளைஞர் பல்லோரும் துணிந்து வந்தார் உளமார்ந்த தொண்டாற்றி யூர்கள் தோறும் உயர்த்துகின்ருர் செந்தமிழை வான ளாவ ! பழகுதமிழ்ச் சொல்லருமை கேட்டு மக்கள் பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் காத்து நிற்கக் குழைந்தபொங்கல் ஏந்திவந்து தமிழ மங்கை குமரருக்கும் செல்வியர்க்கும் படைக்க லாள்ை! 一平一