பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சூரியன் எங்கே சொல்லம்மா
தூங்கி எழுந்தபின் வருமோசொல்
ஏரியில் எங்கும் விளக்கில்லை
எப்படி மீன்கள் நீந்திடுமோ?

துள்ளியே ஆடும் அலைகளுக்கே
தூக்கம் என்றுமே கிடையாதோ?
வெள்ளி நிலாவும் பந்தல்ல
மெல்லவே ஒடமாய் வருவதும்ஏன்?

21