பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாசி மாதம் பூவும் பிஞ்சும்
மகிழ்ந்து நீயும் பார்த்து நின்றாய்
பங்குனி மாதம் பச்சைக் காய்கள்
பல்லுக் கூசிட நீயும் தின்றாய்
சித்திரை மாதம் தேனாய்ப் பழுத்தேன்
சின்னப் பாப்பா உண்ண வாவா
ஒட்டு மாம்பழம் உனக்குப் பிடிக்கும்
உண்ண வாவா சின்னப் பாப்பா!

24