பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

ஆறுகள் எல்லாம் எனக்குத் தண்ணீர் வழங்குவதற்குத்தான் இருக்கின்றன என்று நினைக்க வாய்க்கால் ஆசைப்படுகிறது.



பெயரில்லாத ஒரு மலரைத் தனக்கு உறவு என்று ஏற்றுக்கொள்ளச் சூரியகாந்திப்பூ நாணியது.


சூரியன் எழுந்தான் ; அந்தப் பெயரில்லாத மலரைப் பார்த்து, “என் அன்பே, நீ சுகமா?” என்று கேட்டுக்கொண்டே புன்முறுவல் செய்தான்.

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

29