பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பங்கு பெறப் பாண்டியனும்-சேரனும் படையுடன் வந்து சேர்ந்தார் வேளிருடனே எங்குமவர் வீரர் நிற்பதைக்-கரிகாலன்
இருகண்ணால் பார்த்தும் மனம் கலங்கவில்லை

சோழர் படை முன்னணியிலே-காளையவன் தோன்றிச்சிங்கம் போல நின்றான் கையில் வாளுடன் ஆழியலை போலப் பகைவர்-ஈட்டிகொண்டு
ஆர்ப்பரித்துத் தாக்கவந்தார் நம்பிக்கையுடன்

இப்பெரும் படைக்கு முன்பு:நாம்-நின்றிங்கு எப்படித்தான் வெல்வதென்று சோழ வீரரும் செப்பிமனம் குழம்பி விட்டார்-அவரெலாம்
சிந்தைதுணி வெய்தக்கரி காலனும் பாய்ந்தான்

மின்னலென்று வாள்வீசினான்-பகைவரை வெட்டிவெட்டிச் சாய்த்துப் பரி மேலே தோன்றிடும் வன்ன மயில் வாகனனைப்போல்-கரிகாலன் வட்டமிட்டுத் தீக்கொழுந்தாய் எங்குமிருந்தான்

57