பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


எங்கள் வீட்டுத் தோட்டம்-அதற்கு
எத்தனை பறவை வருமோ !
மஞ்சள் மூக்கு மைனா-இரண்டு
வந்து பூச்சி பிடிக்கும்

சிட்டுக் குருவி பத்து-மணலில்
தினமும் முழுகிக் குளிக்கும்
பெட்டைக் கோழி ஒன்று-குஞ்சைப்
பிரியமாகக் காக்கும்

சின்னஞ் சிறிய சிட்டு-பூவின்
தேனைக் குடிக்கும் சிட்டு
கன்னங் கரிய சிட்டு-அதுவும்
காலைப் பொழுதில் வருமே

பச்சைக் கொன்றைக் காயைப்-பறித்துப்
பவழ வாயில் தின்னும்
பச்சைக் கிளியின் கூட்டம்-புதரில்
பறந்து பறந்து மறையும்

அழகுக் கொண்ட லாத்தி-தரையை
ஆணி மூக்கால் குத்திப்
புழுவைத் தேடி யுண்ணும்-மெதுவாய்ப்
பூனை வந்தால் பறக்கும்

எங்கள் வீட்டுத் தோட்டம்-அதிலே
எத்தனை எத்தனை பறவை!
அங்கு நானும் செடியின்-மறைவில்
அவற்றைப் பார்த்து மகிழ்வேன்.

37