பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மதுரைக் குமரனர் யாயிற்று. அரசரது அரசுரிமையும் தலைவர்களது தலைம்ை யும் தொழிலாளரது தொழின்மையும் வழிவழியாக வரும் அளவில் ஒழுகிவந்தன. இவ்வகையால் கல்வி நலம் மக்க ளிடையே பாவிப் பெருகுதற்கு வாய்ப்பிழந்தது. மேலும், மைந்து பொருளாக வேந்தரிடையே அடிக் கடி போரும் நடந்து வந்தது. ஆனியற் பார்ப்பனரும் பெண்டிரும் பிணியுற்ருேரும் மகப்பெருதவரும் ஆகிய இவர்கள் போரில் விலக்கப்பட்டனர். இந்தச் சிறப் புடைய அறத்தால் பார்ப்பனர் முதலியோர் இடை யூறின்றி நீங்கினர். உடல் நலமும் குடிவளமும் படைத்த ஆண் மக்கள் தொகை குறைவதாயிற்று. அடிக்கடி நிகழும்: போரில் நல்லாண்மையுடைய மக்கள் இறந்தனர். மிகச் சிலரே எஞ்சினர். பார்ப்பனர் அக்காலத்தே ஒதுதல், வேள்வி செய்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டனரே யன்றி, உழவு, வாணிகம் முதலிய தொழில்களில் ஈடு படாது பிறர் உழைத்துப் பெறும் பொருள் பெற்று வாழ்ந்துவந்தனர். ஆயினும், அவர் தொகையும் பெருக வில்லை. இன்றும் அவர் மிகச்சிலராகவே உள்ளனர். அவர் செய்த அறுவகைத் தொழில்களும் அவர்குடிபெரு கத்தக்க ஆக்கத்தை அவர்கட்கு நல்கவில்லையென்பது இத ல்ை விளங்குகிறது. நல்ல ஆண் மக்கள் குறைந்தன்மயின்; பெண்டிராலும் நாடு அறிவுடைய நன்மிக்களேப் பெறும், வளம் பெருதாயிற்று. பிணியுற்ருேரும் ம. க. ப் ಶ್ಗ தோரும் நாட்டில் இருந்தும் நாட்டுக்குப் பயன்பட்ாராயி னர். இவ்வாற்ருல் தமிழ் வேந்தர் அடிக்கடி செய்த போர்கள் தமிழ் மக்களின் குடி வளத்தைச் சீரழித்து வங் தன என்பது நன்கு விளங்கும். இங்கிலையில் அறிவுடை ான்மக்கள் மிகக் குறைவாக இருந்தனரென்பதும், அதனல் கல்வியறிவு எல்லா மக்களிடத்தும் பரவி நிலவ இயலா தாயிற்றென்பதும் இனிது புலனுகின்றன. இங்ங்னம் கல்வி கேள்விமிக்க சான்ருேர் தொகை சிறிதாதலே வேந்தர்கள் உணராமல் இல்லை. அ வர்கட்கு வேண்டும் உதவியைச்செய்து பேணுவது தமக்குக் கட