பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மதுரைக் கமரர்ை குமாளு این வெளிநாடு சென்று தங்கும் ஒருவர், அங்கிருந்தே தமது தாய்நாட்டை கினைப்பராயின், அங்கினேவால் உள் ளத்தில் தோன்றும் தம் நாட்டுக் காட்சி, நெஞ்சகம் முழு தும் கிறைந்து நரம்புக்கால்தோறும் உவட்டெடுத்தோடும் இன்பவெள்ளத்தைப் பெருக்கும். கோனுட்டுக் குன்று கள் பசுங்தழை போர்த்து அருவியொலிப்ப, மாவும் புள் ளும் மலிந்து, இனிய காட்சிகளைக் குமரனுர் மனக் கண் அணுக்கு வழங்கின. அவற்றின் திண்மையும் செம்மையும் அவருள்ளத்தே கலங்கா கிலேமை பயந்தன. காட்டாறு கள் பலவும் மிகச் சிறியவேயாயினும் மழை பெய்யுங் தோறும் நீரைச் சிதையவிடாது கம்பால் பெருகுவித்துக் கொண்டு சென்று கால்களிற் செலுத்தி வயல் வளிம்படுத்தி யும் குளங்களை நிரப்பியும் உணவுப்பொருளே விளைத்தும் உயிர்க்ட்குணவாக்கியும் அங்ைேரப் பயன்படுத்தும் செயல், மக்கட்கு முயற்சிவழி யெய்தும் பொருள் அறவழிகளிற் சென்று இல்லாரை வளர்த்தும், குறைந்தாரை கிறைத்தும், தாழ்ந்தாரை யுயர்த்தும், மேன்மேலும் பொருளே மிகு வித்தும், தம்மையுடையார்க்கு நல்வாழ்வளித்தும் நற். செல்வமாதல் வேண்டுமென்னும் ஒள்ளிய அறவுணர்வ்ை. அவர் புலமை .யுள்ளத்தில் நிலைபெறுவித்தது. எஞ்சும் நீரை அக்காட்டாறுகள் சேசே கடலிற்கு அளிப்பது கண்ட குமாளுர், குடிமக்களும் தாம் செய்யத் தகுவனவற்றைச். செய்ய எஞ்சும் பொருளைத் தம்மையாளும் வேந்தர்க்கு இறையாகச் செலுத்துவது கடனென்று தெளிந்தார்; கடலடைந்த காட்டாற்றுநீர் மீளவும் முகிலால் மழையாக வருவது கண்டு, வேந்தர்க்கு மக்கள் நல்கும் இறைப் பொருள் அம்மக்கட்கே மீளவும் நலம்புரியும் வருவா யாதலை நன்கறிந்தார். இங்ால்லுணர்வு முற்றும் குமரனு ரது புலமையுரைக்கு ஆக்கமாயின மனத்திற்குத் திட்பம் மிகுவித்தன. - இங்ங்னம் பிறந்த நாட்டுணர்வு, ஒவ்வொரு மகனுக் கும் மகளுக்கும் மனநலமே விளப்பதைச் சான்ருேர், ஈன்முக அறிந்திருந்தனர். ஒருவனுக்கு அயலான் குடி