பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லிசைப் புலமைச் சான்ருேர் 33 சுருங்கச் சொல்லின், பண்டைச் செல்வத் தமிழ் மக்கள், இரவலர்க் கருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் ' என்ற கருத்துடைய ரென்பது சாலும், உண்டாரை நெடுநாள் வாழப் பண்ண வல்ல நெல்லிக் கனி பெற்ற அதியமான் ஒளவைக் கீந்து புகழ்பெற்றது கல்லிசைப் புலமை சான்ற நல்லோர் உலகில் இனிது வாழ்தல் வேண்டுமென்ற கருத்துப்பற்றியேயாம். இக் கருத்துடையாய் வேந்தரும் பிறரும் ஒழுகியது. கண்டே, பண்டைச் சான்ருேர் பொருள்கருதிப் போர் மேற் செல்லும் வேந்தர்களின் போர்த்திறத்தை வியந்து விரித்துப் பாடி யூக்கினர். அவ்வேந்தர்களும் வென்று. கொண்டுவந்த திறையும் பிறவுமாகிய செல்வத்தைப் பரி. சிலர்க்கே வழங்கினர். போர் வாயிலாக வந்த பொருள் இல்லாது இன்மை தீர்த்தற்குப் பயன்பட்டமையின், சர்ன் ருேர் அவர் செயலைப் பாராட்டிப் பாட்டிடைவைத்து. என்றும் கிலேபெறச் செய்தனர்; நாட்டில் பொருள்வளம் மிகுவித்தல் குறித்து வேந்தர்களைக் காடுகொன்று நாடாக்கு, மாறும் குளங்தொட்டு வளம் பெருக்குமாறும் அறிவுறுத்தி னர்; இறைபெறுமிடத்தும் முன்றயே அறநெறி பிழை யாது பெறுமாறு தெருட்டினர்; பகைக்கஞ்சி அடைமதிற். பட்ட விடத்துத் தம்மாற் பேணப்பட்ட வேந்தரை ஊக்கிப் போருடற்றிப் புகழ் நிறுவுமாறு மறத்திக்கொளுத்தினர். போர்மேற்சென்று வென்றி மேம்பட்ட் வேந்தன் மேலும் போரே விரும்பி யொழுகின், அவனுல் நாடழிதலும் அதல்ை உயிர்கள் வருந்துமாறும் எடுத்தோதி அவனுள் வத்தில் அருளுற்றெழுமாறு பாடினர். இயற்கையில் தீய கழ்ச்சிகள் உண்டாயின், வேந்தர்க்குக் குற்றமெனக் காட்டி அவர்களை அறத்தாற்றில் ஒழுகுமாறு பணித்தனர். குடி மக்கள் முறைவேண்டியும் குறைவேண்டியும் வருவ ராயின் வேண்டுவார்க்கு வேண்டுவன வழங்கப் பண்ண னர். நற்பண்புடைய வேந்தர்பால் மாறுபட்ட கருத்தால் போர்கிகழ விருக்குமாயின் அவர்களேச் சந்துசெய்து போரை கிகழவெரட்டாது தடுத்தனர். தமிழ் மூவேந்