பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோனுடு 59 ஒருவர் வலிமிக்க காலத்தில், ஒருவர்க்குரிய நாட்டை மற் ருெருவர் கைப்பற்றிக் கொள்வது இயல்பாயிற்று. இவ் வகையில் பாண்டியர்க்குரிய ஒல்லையூர் நாடு சோழன் கைப் படுவதும், சோழர்க்குரிய கோடுை பாண்டியர் கைப்படுவ தும் அவ்வப்போது நிகழ்ந்தன. ஒருகால் ஒல்லையூர் நாடு சொழர் கைப்பட்டது. அக்காலத்தே பாண்டிநாட்டைப் பூதப்பாண்டியலுடைய முன்னுேர் ஆட்சி புரிந்தனர், பூதப் பாண்டியன் அரசு கட்டிலேறியதும் பாண்டிய நாட்டின் வடவெல்லைப் பகுதியாகிய ஒல்லையூர் காட்டை வென்று கொண்டான். அதல்ை அவனுக்கு ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்ற பெயருண்டாயிற்று. குடவாயிற் சீரத் தனரென்னும் சான்ருேர் ஒல்லையூர் நாட்டு ஒல்லையூரில் வாழ்ந்த பெருஞ்சாத்தன் என்னும் வள்ளல்பால் நட்புற் றிருந்து அவன் இறந்தபின் மனங்கன்ரந்து 'முல்லையும் பூத் தியோ ஒல்லையூர் நாட்டே' (புறம்: உச.உ) என்று பாடிய பாட்டொன்று காணப்படுகிறது. - - இனி, கோனுட்டின் கீழ்ப்பகுதியில் எறிச்சிலுர்) என்ருேர் ஊர் உண்டு. அஃது இப்போது எறிச்சியென வழங்குகிறது. இங்காட்டில் ஒல்லையூர் ஒலியமங்கலம், என்றும், முதுகுன்றம் முச்சுகுண்டம் என்றும், விறை யான்குடி விளாங்குடி யென்றும், சிகரகல்லூர் சேரனூ , ரென்றுக் கிரிந்து வழங்குவது கல்வெட்டாராய்ச்சியா ளர் நன்கறிந்த தொன்று. அம்முறையே எறிச்சிலுர் இந்நாளில் எறிச்சியென மருவுதலில் வியப்பென்னேயோ இவ்வூரில் வாழ்ந்தவருள் மாடலனுர் என்பவர் ஒரு வர். மாடலன் என்பது செல்வமுடையவன் என்னும் பொருள்பட வரும் மக்கட்பெயர் வகையுள் ஒன்று. இப் பெயர் தமிழகத்து மக்களில் பலருக்குப் பல காலத்திலும் பயின்று வந்திருக்கிறது. சங்ககாலத்தை யடுத்துவக்க சிலப்பதிகாரத்தில், மாமறை முதல்வன் மாடலன் என் போன்’ (15: 18) என வருகிறது. பன்னிரண்டாம் நூற்ருண்டில் எழுந்த இந்நாட்டுக் கல்வெட்டுக்களில் இந்த மாடலன் என்னும் பெயருடையார் காணப்படுகின்றனர்.