பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மதுரைக் குமாளுர் நிலவரை ’ (புறம். எஉ) என்று வஞ்சினம் மொழிவதும் காண்க. இவ்வாறு வேந்தர்களால் நன்கு மதிக்கப்பட்ட நல் லிசைப் புலமைச் சான்ருேர் பலரும் கல்வி கேள்வியிற் பிறக்கும் இன்பத்துக்கு இரையாகி வேறே பொருள் செய் தற்கமைந்த பிற துறைகளே நாடாது, தமது புலமை நயந்து செல்வர் நல்கும் பொருள்பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர் பாடும் பாட்டுக்களே யாழ் முத லிய இசைக் கருவிகளில் வைத்தப் பாணரென்பார் பாடி மக்களை இன்புறுத்தினர் ; கூத்தரென்பார் கூத்தாடி இன் பம் கல்கினர். இம்மூவராலும் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் முறையே வளர்ந்து வந்தன. நாம் முன்னே கூறியபடி வேந்தர்கள் பலரும் புலவரைப் பேணி இயற்றமி ழையும், பாணரை யோம்பி இசைத் தமிழையும்,கூத்தரைப் போற்றி நாடகத் தமிழையும் வளர்த்தார்கள். முத்தமி ழையுங்கொண்டு தமிழ்ச் செல்வர்களே உவப்புறச் செய்து அவர்தரும் பரிசில் கொண்டு வாழவேண்டியவர்கள் இவர் கள். அதனுல் இவர்களைப் பரிசிலர் என்றும் வழங்குவர். இவர்கட்கு யாதும் ஊரே ; யாவரும் கேளிரே. பழு மாம் தேர்ந்து செல்லும் பறவைபோல இவர்கள் எப்ள்ே தும் கொடைகலம் சிறந்த செல்வ ரன்மக்களேத் தேடிச் சென்று பரிசில் பெற்று வாழ்ந்தனர். இசை நாடகங் களிற் போல இயற்றமிழிலும் ஆடவர் பெண்டிரென வேறுபாடின்றி ய | வ ரு ம் புலமை பெற்றிருந்தனர். புலமை யென்பது பால் வேற்றுமை காணுது எல்லார்க் 鸚 ஒப்ப அமைவதென்று தமிழ் வேந்தர் நன்கு அறிக் திருந்தனர். அதனுல் ஆடவர்க்குப்போல மகளிர்க்கும் நன்மதிப்பும் நற்பரிசிலும் தந்து சிறப்பித்தனர். மக்ளி ருள் ஒளவையார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், மாருேக்கத்து நப்பசலையார் முதலாகப் பலர் உண்டு. அவர் பாடிய பாட்டுகள் பல, சங்க காலத் தொகை நால் களிற் காணப்படுகின்றன. மகளிரெனத் தமிழ் வேந்தர் இகழ்ந்து நோக்கியதாகக்கூடத் தமிழ் நால்களுள் எங்கும்