பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"கோமாளி அண்ணா குப்பண்ணா
குடமே போலொரு வயிற்றண்ணா
ஏமாளி யிங்கே யாரண்ணா
எனக்குக் கொஞ்சம் சொல்லண்ணா"

“பாடு படுபவன் பாட்டாளி
பகையே செய்பவன் பகையாளி
கூடி உழைப்பவன் கூட்டாளி
குணமே கெட்டவன் ஏமாளி

சொல்லைக் காப்பவன் சொல்லாளி
தொழிலைச் செய்பவன் தொழிலாளி
வில்லில் தேர்ந்தவன் வில்லாளி
வீணாய்த் திரிபவன் ஏமாளி”

25