பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவேந்தர் தொடர்பு 81 கள் முளைத்துப் பூத்திருப்ப, ஆங்கே களை யெடுத்துப் போர்த கடைசியர், புல்லையும், ஆம்பலையும் களைவதோடு நெய்தலேயும் களை வாயினர். குமரனுர்க்கு இஃதொரு, வியப்பைத் தந்தது. சிறிதாய் அழகிதாய் அவர் தம் கண்போல் விளங்கும் நெய்தலைக் களைந்தது கண்டு, ' கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர், சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு” களை யெடுக்கின்றனரே யென்றர். பின்பு, அவர் பார்வை வயலகத்தே சென்றது. வயல் களில் நிறைந்து கிற்கும் நீரில் மலங்கு மீன்கள் மேய்ந்து கொண்டிருந்தன. சில வயல்களில் நீரை வடித்துச் சேற்றை ஆழ அழுது பண்படுத்த வேண்டி உழவர் தளம் பென்னும் உழுகருவி கட்டி உழுதனர். களம்பின் அடியில் சேற்றைக் குத்திக் கட்டிகளை யுடைத்துச் செம்மை செய்யும் இருப்பாணிகள் சேற்றிற் பதிந்து சால் சாலாகப் பிளந்துகொண்டு சென்றன. சில இடங்களில் அருகி லிருந்த நீர்நிலையில் வாழ்ந்த வாளை மீன்கள் போந்து சேற்றிற் படிந்து கிடந்தன. அவ்வழியே த ள ம்பு செல்லவே, அவ் வாளை மீன்கள் குறுக்கிட்டு இருப்பாணி யால் துண்டு துண்டாய்விட்டன. அத்துண்டுகளைக் கண்ட உழவர் எடுத்து அவற்றை நீரிற் கழுவித் தளம்பினது ம்ேழியிற் கட்டப்ப்ெற்றிருந்த வட்டிகளிற் பெய்து கொண்டனர். இச் செய்கையைக் கண்ட குமரனுர்க்கு. ஒருபால் இரக்கமும் இத்துண்டுகளே உழவர் என் செய்வ் ரென்றெழுந்த வேட்கையால் ஒருபால் வியப்பும் உண் டாயின. ஞாயிறு மறையத் தொடங்கிற்று உழவர் தத்தம் வீடு திரும்பினர். வாளைத்துண்டுகள் பெய்த வட்டிகளும் வீட்டிற்கு வந்தன. மகளிர் புது நெல் குற்றிய அரிசியை வெளிதாகத் தீட்டிச் சோறு சமைத்தனர். வா% த் துண்டுகள் அச் சோற்றுக்குத் துணைக் கறியாக (கண் லுறையாக) அடப்பட்டன. தனேக்கறி துணை செய்யப் புது நெல் வெண் சோற்றை நன்கு உண்ட உழவர்க்கு இரவுப்போதும் இனிது கழிந்தது. ம, கு.-6