பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாடி நீண்ட தாத்தா
தடவி ஒரு நாள் பார்த்தார்!
மாடப் புறா ரண்டு
மைனாப் பறவை ரண்டு
காடைக் குருவி ரண்டு
கரிக் குருவியும் ரண்டு
தாடிக்குள்ளே தங்கி
கூடு கட்டி அங்கு
மூடி ஒளிந்து கொண்டு
முட்டை யிட்டன ரண்டு!
தாடி நீண்ட தாத்தா
தடவி ஒரு நாள் பார்த்தார்!.

59