பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மதுரைக் குமரனர் 'இவள் இங்கிலம் கொண்டு இத்திருநாளுக்கு ஆடக்கடவ கூத்து ஒன்பதும் ஆடுவாளாகவும் ; விளையாத ஆண்டு ஆடின. கூத்துக்குக் கொற்றுவிடுவதாக” (P. S. ins.. 128) என்று ஏற்பாடு செய்து கல்வெட்டித் தந்துள்ளனர். " திருநாடகமாடும் வல்லநாட்டு நங்கை மகன் அகளங்க ஆசாரியனுக்கு இறையிலி' (P. S. ins. 538) நிலம் இவ் ஆரவரே விட்டதாக வேருெரு கல்வெட்டு கூறுகிறது. பொன்னமராவதியிலுள்ள பெருமாள்கோயில் கல்வெட் டொன்று. சீரங்கநாயகி யென்பவள் நாடகப் பயிற்சி முடிவில் அரங்கேறினுளாக, அவட்கு ஊரவர் ஒருமா கிலம் இறையிலியாக விட்டனர். இச் செய்தியை, 'எழில்புனையுஞ் சகாத்தமாயிரத்து முந்நூற் றறுபத் தெட்டதன்மேற் செலுமேட விரவியின் முற்றிதியில் வழுவிலெழு பக்கமர்க்க வாாமுடன் பெற்றே - - வருபுனர்த்தாள் விளைசை வாழ்வனச மறையோன் செழுமைப்யில் திருவனந்தன் பணியால்வென்றிச் சீரங்க நாயகிதான் தென்பொன்னை நகர்மே - வழகர்திருக் கோயிறனில் முதலடைவும்பெற்றே -- - அரங்கேறி யவை மதிக்க ஆடினளே” (P. S. ins, 781) என்ற கல்வெட்டு அறிவிக்கிறது. ஏழாம் நூற்ருண்டில் எழுந்த குடுமியாமலே இசைக் கல்வெட்டு ஈண்டு நினைவு கூாததககது. - இயற்றமிழ் வல்ல புலவர்க்குப் பரிசில் தந்து சிறப்பிக் கும் முறை இடைக்காலத்தே தன் இயல் குன்ருமலே இருந்திருக்கிறது. சோழ நாட்டு மண்டலங்களுள் ஒன் முன் ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில் க்ளத்துர்க் கோட்டமென்பது ஒன்று. அதன் கண் உள்ள ஊர்களில் மருதத்துரினனை குன்றன் திருச்சிற்றம் பலமுடையான் என்பவன் ஒரு புலவன். இவன் வட கோனுட்டு உறத் துர்க் கூற்றத்துப் பையூரில் வாழ்ந்த திருச்சிற்றம்பல முடையான் வேதவன முடையானே ப் பாடிக் குடிக்கா டொன்றைப் பரிசிலாகப் பெ ற் ரு ன் பெற்றவன், 'யாதும் ஊரே யென்ற கொள்கையால் எங்கும் கொடுப் போரை நாடிச்சென்று அவர்கொடைப்புகழை நிலைநாட்