பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மதுரைக் குமானுர் றறுபத்தைந்து சதுர மைலும், திருமயம் முந்நூற்றறுபத் தாறு சதுர மைலும் தனித்தனியே பரப்புடையன. இந்த நாட்டில் இந்நாளில் ஐந்து லட்சம் தமிழ் மக்கள். வாழ்கின்ருர்கள். இவர்களுள் எழுதப்படிக்கத் தெரிந்த, வர்களின் தொகை ஏறக்குறைய ஐம்பத்து மூவாயிரத்' துக்குமேல் இல்லை. படித்த மக்ளிரின் தொகை: நாலாயிரத்தைந்நூறுக்குமேல் இராது. சுருங்கச் சொல் லின் படித்தவர் நூற்றுக்குப் பதினுெருவருக்குமேல் இத் தனியரசிலும் இலர் என்று காணலாம். இது காண்பவர் தமிழர் தனியரசிலும் கல்விநிலை உயராதுபோலும் என்று: எண்ணுதல்கூடாது. சூழவிருக்கும் நாட்டின் அரசியற் சூழல் இதன்கண் வந்து தாக்குமென்பதை நினைவு கூர்க் தால் அங்ங்னம் எண்ணுதற்கு இடமில்லையாம். இங்காட் டின் தென்பகுதியில் வாழும் நாட்டுக்கோட்டைச் செட்டி, யார்கள் எனப்படும் நகரத்தார்கள் தென்னிந்தியப் பெரு நிலப்பகுதி முற்றுமன்றி, ஈழநாடு கடாரநாடு சாவககாடு முதலிய ப்ல நாடுகட்கும் கலத்திற் சென்று பெரும் பொருளிட்டி வந்து பெருஞ்செல்வ வாழ்வு வாழ்பவராவர். இவர்கள் கழிந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் தமிழகத்தி லுள்ள பெருங்கோயில்கள் பலவற்றிற்குப் பல கோடிக் கணக்கான பொன்னைச் செலவழித்துத் திருப்பணி செய் துள்ளனர். அவர்கட்குமட்டில் அப்போதே நாட்டு மக்கட்கு நல்லறிவு வழங்குவதாகில் கல்வித் தொண்டின் பெருகுலத்தை அறிவுடையோர் அறிவித்திருப்பின், அத் தொகையில் பெரும்பகுதி கல்வித் துறையில் சென்று அறிவுப்பயனை நாட்டு மக்கட்கு விளேத்திருக்கும் அவர்கள் செய்த திருப்பணியின் விளைபயனும் மிக்க சிறப்புடன் விளக்க மெய்தியிருக்கும் மக்களென்பார் நடமாடுங் கோயில்கள்; நடமாடாக் கோயில்கட்குச் செய்யும் திருப் பணியிலும் நடமாடுங் கோயில்கட்குச் செய்யும் திருப்பணி நாட்டிற்குப் பெருநலத்தைச் செய்யும் : அப்பெருநலம் நடமாடர்க் கோயில்களையும கன்னிலையில் வைத்து மாண் புறுவிக்கும் என்ற இக்கருத்தை முன்பே அப்பெரு