பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மதுரைக் குமானுர் புதுக்கோட்டை யரசிலுள்ள பேரையூர்க் கல்வெட் டொன்று (P. S. 1, 225) மாடலன் நாராயண மாதவன் என்பான் ஒருவனேக் காட்டுகிறது. இக்காலத்தே இப் பெயர், இடைகின்ற அல்லென்னும் சாரியையின்றி, ' மாடன் ” என மாறித் தாழ்ந்த வகுப்பாரிடையே மக் கட்பெயராக வழங்குகிறது.


مم-مسیحی

4. மதுரைக் குமானர் கோனுட்டு எரிச்சிலுரில் வாழ்ந்த மாடலனுர் நல்ல தமிழறிவு வாய்ந்தவர். அவர் இருந்த ஊரைச் சுற்றிக் காடுகள் மிக்கிருந்தன. ஊரில் வாழ்ந்தவரும் பெரும் பாலும் இடையர். ஆனிரைகளைக் காடுகட் கோட்டிச் சென்று மேய்த்து வருவதும், புன்செய்களை உழுது வரகு முதலியவற்றை விளைத்தலும் செய்தனர். காடு சூழ்ந்த இட மாதலின் கானவிலங்குகளின் துன்பம் ஊரவர்க்கு உண். டாவது இயல்பே. ஆயினும், அவற்றிற்கு அஞ்சி வேற்றி டம் காடும் மன நினைவு அவர்கட்கு உண்டானதில்லை. நன்மக்கள் மதிக்கத்தக்க முறையில் இல்வாழ்வு நடத்தும் ஏற்றம் மாடலனுருக்கும் அவரது ஊரினருக்கும் சிறப் புற அமைந்திருந்தது. . . . . . மாடலனருக்கு உரிய காலத்தில் ஒரு மகன் பிறக் தான். இளமையிலே கூர்த்த மதியும் எல்லார்க்கும் இனிய நகை விளைவிக்கும் காலமும் அம்மகனிடம் அமைந்திருந்தன. கற்றல் நன்று ' என்றும், கல்வி யால் அறிவுடையோன் வழியே நாடாளும் அரசரது அர சியல் செல்லும் சிறப்பினையுடையதென்றும் மாடலஞர் நன்கறிந்திருந்தார். அதனுல் தன் மகனுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் அரும்பணியை மேற்கொண்டார். அவர் வாழ்ந்த கோனுட்டில் குமாமலே யென்னும் பெயருடைய குன்ருென்று உண்டு. அக்குன்று முருகனுக் குரியது. அம்முருகன்பால் தமக்குள காகிய அன்பால் முருகனுக் குரிய குமரன் என்ற பெயரையே தம் மகனுக்கு வைத்