பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லிசைப் புலமைச் சான்றேர் 11 நாற்பத்தெண்மரும் இருந்தன்ரென்றும், இவருள் அரசர், செல்வர், ஆடவர், பெண்டிர், பார்ப்பார், வணிகர், வேளா ளர் முதலிய பலரும் இருந்தனரென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இதன்ைக் கொள்ளர், தொழிபவரும் உண்டு. நெடுங்காலமாக இச்செய்தி தமிழ் காட்டில் தொன்று தொட்டு வழங்கி வருதலால், இதனைக் கொள்ளோமென்று மறுத்தல் நீேர்மையர்காது. இச் செய்தியால் ஒரு சிறந்த உண்மை புலனுகிறது. ஒரு காலத்தே நல்லிசைப் புலமை மிக்க சான்ருேர் மிகப்பலர் இருந்தனரென்பதும், வாவா அவர் தொகை குறைந்த தென்ப்தும், புலமைக்குப் பாலும் தொழிலுமாகிய வேறுபாடு கிடையாதென்பதுமாம். வேற். காட்டவர்களின் மொழி கலை அரசியல் வாணிகம் சமயம் முதலிய கூறுகள் விரவி. மக்கள் தொகை பெருகி. ற்கும் இந்நாளில் பிழையறத் தங்கள் தாய் மொழியில் நினைக்கவும் பேசவும் எழுதவும் வல்லவர் தொகையே நூற். றுக்கு ஐந்து பேருக்கும்ேல் இல்ல்ை பென்ருல், பண்டை ாளில் புலவர் திெர்கைமிகக் குறைந்துபோயிற்றென்பதில் வியப்புண்ட்ாதற்கு இடம்ெங்கேயிருக்கிறது. தமிழ் மக்களே வாழ்ந்த தமிழகத்தில் தமிழரசும், தமிழ் மொழியும் தமிழ் விானிக்மும்ே நிலவியபோது தமிழ்ச் சான்ருேர் தொகை குறைவானேன்? இடைத் காலத்திலும் இக்காலத்திலும் வேற்றுகாட்டுப் படர்ச்சி யால் ஒருகால் குறையலாமாயினும், இரண்டாயிர மாண்டு கட்கு முன்பு சான்ருேர் தொகை குறைவது தகாதன்ருே? என்ற எண்ணம் நம்மனுேர் மனத்தே எழலாம். அவ்வாறு எழுவதும் முறையே. இக்காலத்தே எல்லா நாடுகளிலும் அந்த நாட்டு அரசியல், அதன் கீழ் வாழும் மக்கள் கல்வி யறிவு உடையாக வேண்டுமென்பதைத் தன் கடனுக மேற்கொண்டிருக்கிறது. அத்தகைய அரசியற் சூழலில் நாம் வாழ்கின்ருேமாதலால், நாம் இவ்வாறு நினைப்பது முறையாகிறது. பழங்காலத்தில் அரசர்கள் இக்கொள் கையை மேற்கொண்டிலர் ; எல்லா நாடுகளும் பழைய காலங்களில் இதனை மேற்கொள்ளாமலே இருந்திருக்