பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடுை 67 டிற்ருேன்றிய சான்ருே ரென்டாரும் உண்டு. 'இன்னேர் பலரும் வடமொழிப் புலவராய் மேம்பட்டு அம்மொழியில் தம் நூல்களே எழுதியதுகொண்டு இவர்களைத் தமிழ்ால்ல ரென ஒதுக்குதல் அறிவுடைய தமிழ் நன்மக்கட்கு அற மாகாது. இம்முறையில் தமிழ் வேந்தர் எல்லாச் சமயங்கட்கும் ஒத்த ஆதரவே புரிந்துவந்தனர். இவரது ஆட்சி நீழலில் சமணம், பெளத்தம், சைவம், வைணவம் முதலிய பல சம யங்களும் வளர்ந்தன. ஆயிரத்துமுந்நூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த மகேந்திரவன்ம பல்லவன் காலத்தே பாண்டி காட்டை ஆண்ட நெடுமாறன் என்பான் சமணசமயத்தை மேற்கொண்டான். அவன் மனைவி மங்கையர்க்காசியார் சைவ சமயத்தை மேற்கொண்டொழுகினர். அவனுக்கு முன் எண்ணுாருண்டுகட்கு முன்பே சேர வேந்தனை செங் குட்டுவன் சைவனுய்த் திகழ்ந்தான்; அங்கிலேயில் திருமாலை: வழிபடும் நெறியைப் புறக்கணிக்கவில்லை. அவன் இளிவு. லர்கிய இளங்கோவடிகள் தாம் எழுதிய சிலப்பதிகாரத் தில் சம்ண சமயத்தையும் திருமால் வழிபாட்டையும், கொற்றவை வழிபாட்ட்ையும் விரியக் கூறினர். இட்ைக், கால வேந்தருள்ளும் செந்தமிழ்ப் பாண்டி வேந்தன், கோமாற வன்மனை சுந்தா பாண்டியன், தனது மூன்ரு மாண்டுக் கல்வெட்டொன்றில் மூவகைத் தமிழும் முறை. மையில் விளங்க, நால்வகை வேதமும் வின்றுடன் வளர, ஐவகை வேள்வியும் செய்வினை யியற்ற, அறுவகைச் சமய மும் அழகுடன் திகழ, எழுவகைப் பாடலும் இயலுடன் ப்ரவ, எண்டிசையளவும் சக்கரம் செல்ல’ (P. S. Inš, 250). வீற்றிருந்ததாகக் கூறுவதுகொண்டு இத்தமிழகத்து வேர் தர் சமயத்துறையில் ஒாம் கொள்ளாது உயர்ந்து வாழ்ந்த செய்தியைத் தெளிய உணரலாம். இதன் பயனுகச் சமயத் தலைவர் பலர் தோன்றிப் புதுப்புதுக் கொள்கைகளை ஆராய்ந்து கண்டு நாட்டில் அவற்றைப் பரப்பினர். நாட்ட வர்க்கும் சமயவுரிமை யிருந்தமையால் கொள்வன கொண்டு உயரிய சமய நாகரிக முடைய ராயினர்.