பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வர் தொடர்பு 99 பரிசிலப் பெற்றத் தமது மதுரை நாட்டுக்குத் திரும்பி வாலாஞர். வருகையில் சேரநாட்டு மலைத்தொடர்களையும் காடு களையும் கடந்து பாலக்காட்டு நாட்டுவழியே வந்தார். அந்நாட்டில் வெண்குடையென்னும் ஊர்க்குரியணுய் ஒரு சிறார்ப் பெருந்தலைவன் விளங்குதலைக் கண்டார். வெண். குடையென்னுமூர், இப்போது மலையாள மொழி வழங்கு மூாாய், வெங்கொடி எனத் திரிந்து வழங்குகிறது. அக் காலத்தே இவ் வெண்குடை யென்னும் ஊர்க்குரிய அத். தலைவன் சேரநாட்டுக் குட்டுவர் குடியில் தோன்றிச் சோழ, வேந்தர் தானேக்குத் தலைவனுய் எனுதிப்பட்டம் பெற்றுக் குட்டுவன் என்னும் குடிப்பெயரே விளங்கச் சோழிய எனுதி திருக்குட்டுவனெனச் சிறப்புற்றிருந்தான். அவன் முன்னேர் குட்டநாட்டில் அரசர் குடியிற் ருேன்றிய தொன்னல முடையர் : இரவலர்க்சித்து இறவாப் புகழ் பெற்ற பழங்குடியினர். அவனது குடிவரவு. மதுரைக் குமரனருக்கு நன்கு தெரிந்திருந்தது. அதனல், அவர். அத் திருக்குட்டுவனைக் காண விரும்பி அவனுடைய இஊராகிய வெண்குடைக்குச் சென்ருர். மதுரைக் குமரனாது வரவு கேட்டறிந்த திருக்குட்டு வன் மிகவும் விருப்பமுற்று அவரை நன்கு வரவேற்று அன்பு புரிந்தான். அவன் செல்வமனைக்கண் த்ங்கிய குமரனுர் வைகறைப்போதில் தம்மொடு போந்த பாணனக் கொண்டு திருக்குட்டுவனுடைய தங் தை முன்ளிைல் மைந்து பொருளாக மண்ணசையுற்று வஞ்சிசூடிப் ப்கை வேந்தர்மேற் படைகொண்டு பொருது மேம்பட்ட திறத் கைத் தமிழ் மணங் கமழும் இசைப்பாட்டமைத்துப் பாடினர். பாணனும் ஒருகண்மாக்கிணையென்னும் இசைக் கருவியை இசைத்தான். பள்ளி யெழுச்சிக் காலத்தே துயிலுணர்ந்தெழுவோர் பலரும், தெளிந்தமைந்திருக்கும் தம் முள்ளத்துக்கு மிக்க இன்பம் நல்கும். இப் பாட்டின் இன்னிசையில் ஈடுபட்டு அகமலி உவகை யெய்தினர். திருக்குட்டுவனும் பள்ளி யெழுந்து பாட்டிசையில் ஊறிய