பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மதுரைக் குமரனர் அலைக்கும் உள்ளத்தராய் அயர்வுடைமை தோன்ற ஐயன், மீர், குட்டுவன் கோதையிருந்து காக்கும் குட்ட நாட்டிற் குள் எவரும் புகுதல் அரிதென்பர் அரிதின் முயன்று ங் டு புகுந்து ஊரடையிலும் அவனுடைய செவ்வி. பெறுவது அதனினும் அரிதென்பர். நீவிர் எங்ங்னம் சென்று அவன் செவ்வி பெற்றிர்?’ என வினவினர், குமானுர்க்கு வியப்புப் பெரிதாயிற்று. மதுரைக் குமரனுர் தம்மை வினவிய பரிசிலரை ஆராயலானர். அவர்களைக் குறித்து நோக்கினர். அவ ருள்ளத்தில் உண்மையிலே இவ் வினுக்கட்கு இடமிருப் பதை அறிந்தார். அவரைத் தெருட்டிச் சேரமானேச் சென்று காண்டற்கு உள்ள மெழுமாறு செய்தல் தக்க தெனத் தெளிந்தார். அவரது பார்வையில் அன்பு தோன்றி நின்றது : அன்புடையீர், கேண்மின் ; எங்க்ள். தலைவனை சேரமான் குட்டுவன் கோதையது ஊர் மிக்க கம்பலையுடையது. மக்கள் மனத்தில் அச்சமும், மனேயில், வறுமையும், பேச்சில் கடுமாற்றமும், பிற தொழில் வகையி ல் இ ைட யூ றும் இ ல் லை ; இதுவே கம் பலேக்குக் காரணம்’ என்று தொடங்கிய குமரனர், ' அவனுார்க்கு நீவிர் புதியராய்ச் சென்றீராயினும், அவ் வாறின்றி, அவ்வூர் முற்றும் தொன்று தொட்டு நம் முடையதாக உடையவர் போல இனிது செல்லலாம். எம்மைப்போற் பரிசில் பெற்று வாழ்வர்க்கு அவனுார்க் குள் உரிமையுடன் செல்வது எளிதாகும். சென்றவழி, அவன் கோயிலை யடைந்து அவன் செவ்வி பெறுதற்கும் சிறிதும் கடையிராது. கம்போலும் இரவலரைக் கண்ட அளவில், வாயில் காவலர் வழி விடுவர். சேரமான் குட்டு வன் கோதையும் இறவாத இன்ப அன்பு மொழி வழங்கிப் பெரும் பொருள் நல்கி நம்மைப் பேனுவன்' என்பா தாய, எங்கோன் இருந்த கம்ப?ல் மூதார் உடையோர் போல இடையின்று குறுகிச் செம்மல் நாளவை அண்ணுந்து புகுதல் எம்மன் வாழ்க்கை இரவல்ர்க் கெளிதே'