பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மதுரைக் குமரனர் தாராபூருவமாகப் பண்ணிக் கொடுத்த திருநெற்குன்ற மான புவனேகவீரச் சதுர்வேதி மங்கல ஆரது புரவு சதுர்ச் சீமையும், சகல உபாதியும் கழித்துச் சிருவமானிய மாகப் பண்ணிக் கொடுக்கையில் இந்தப் புவனேகவீரச் சதுர்வேதி மங்கல ஆரது புரவு நான் கெல்லேக்குட்பட்ட நன்செய் புன்செய் எப்பேர்ப்பட்டதும் சந்தி சாதித்தவரை யில் செல்லச் சருவமானியமாக அனுபவித்துப் போதவும்” (P. S. ins. 672) எனவரும் கல்வெட்டால் அறியலாம். - இவ்வாறு அறக் கொடையால் மேம்படும் இடைக் கால வேந்தர் போர் செய்யுமிடத்துச் சிற்சிலரைக் கொல் லக் கூடாதென முன் கூட்டியே பிடிபாடு செய்துகொண் டொழுகினர். "ஆவும் ஆனியற் பார்ப்பன. மாக்களும், பெண்டிரும் பிணியுடையோரும், பொன்போற் புதல்வர்ப் பெருதோரும்” போரிற் கொல்லத் தகாதவரெனப் போர் மறவர் கருதின ரென்பது சங்ககாலத்திற் காணும் காட்சி, இடைக்கால வேந்தர் அவ்வரிசையில் ஊரவர், வழி நடைக் குடிகள், இடை குடி மக்கள் முதலியோரைச் சேர்த்துக்கொண்டு அவர்களைக் கொல்லாது விட்டனர். இதனைத் திரி புவ ன ச் சக்கரவர்த்தி கோச்சடையவன் மரானசுந்தர பாண்டியன் காலத்துப் பதின்மூன்ருவது ஆண்டில் குன்ருண்டார் கோயிலில் தோன்றிய கல்வெட்டு, (P. S. Ins. 484) இந்நாட்டு இரண்டு மலை நாட்டு அரை யர்களோம், எங்களில் இசைந்து பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசாவது: காங்கள் பகை கொண்டு எய்யு மிடத்து எங்கள் காவலான, ஊர்கள் வழி நடைக் குடி கள், இடை குடி மக்கள் இவர்களே அழிவு செய்யக் கடவோமல்ல மாகவும் ; ஒருவன் அழிவு செய்யில் நூறு பணம் தண்டம் வைக்கவும்; ஒரு ஊராக அழிவு செய் யில் ஐஞ்அாறு பணம் வைக்கவும் கடவதாகவும். இப் படிச் செய்யுமிடத்து வெட்டியும் குத்தியும் செத்தும் நோக்கக் கடவர்களாகவும் ' என்று கூறுகிறது. போரிற் கலந்து கொள்ளாத மக்களிடத்து அருள் மேற்கொள்ளும் இவ் வேந்தர், காட்டு மக்கட்கு வரும்