பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜின்கா அதை இரண்டு கைகளாலும் தூக்கிப் பார்த்து விட்டு தொப்பென்று கீழே போட்டது.

“பீரங்கியை எப்படியடா சுடுவார்கள்?” என்று சுந்தரம் கேட்டான்.

“இவையெல்லாம் அந்தக் காலத்து பீரங்கிகள், இவற்றை வைத்துக் கொண்டுதான் ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றினார்கள். திப்புசுல்தான் பிரெஞ்சுக்காரருடைய உதவியைக் கொண்டு பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் வரவழைத்துத் தனது வீரர்களை அதில் பயிற்சியும் கொடுத்திருந்தான். இருந்தாலும் அவனால் ஆங்கிலேயரை நாட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை!” என்றான் தங்கமணி.

அதற்குமேல் தானியக் கிடங்குகளைப் பார்வையிட்டார்கள், ஒரு பக்கத்திலே கைதிகளை அடைத்து வைக்கும் இருட்டறை இருந்தது. உள்ளே செல்லுவதற்கு வேண்டிய வழி மேல் பாகத்தில் இருந்தது. அதை ஒரு பெரிய மரக்காதவால் மூடியிருந்தார்கள்.

மூன்று பேரும் மிகவும் சிரமப்பட்டு அதைத் தூக்கினார்கள். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. அதற்கு மேல் அதைப் பார்க்க அவர்கள் விரும்பவில்லை.

தானியக் கிடங்கில் அரிசி, பருப்பு போன்ற உணவுக்கு வேண்டிய பொருள்களையோ அவற்றில் சேமித்து வைப்பதற்கு ஏற்றவாறு அவைகள் அமைந்திருந்தன.

“கோட்டையை முற்றுகையிட்டாலும் ஆறு மாதத்திற்கு உள்ளே உணவுப் பஞ்சம் ஏற்படாது” என்றான் தங்கமணி.

“அந்தக் காலத்தில் நாம் பிறந்திருக்க வேண்டும். அப்பொழுது நேராக எல்லாவற்றையும் பார்த்திருக்கலாம்” என்றான் சுந்தரம்.

26