பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்


வரும் விருந்தாளிகளையும் இயக்கத் தொண்டர்களையும் சாப் பிடச் சொல்லும் பழக்கம் துவக்கத்தில் பெரியாருக்குக் கிடை யாது.) எல்லா வகையிலும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பது அவர் கூடப் பிறந்த குணம். ஆனால் நாகம்மையார் வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பாடு போடாமல் அனுப்புவது கிடையாது. இரவு பகல் எந்த நேரமானாலும் வீட்டிற்கு வந்தவர்களை உபசரித்து அனுப்புவார் அம்மையார். நாகம்மையார் பண்பாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கினார். விலை உயர்ந்த புடவைகள் வேண்டும் என்றோ, நகைகள் அணிய வேண்டும் என்றோ, அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்றோ அவர் நினைத்தது கிடையாது. வீட்டிற்கு வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருந்திட்டு மகிழ்வது அவர் பிறவிக் குணமாய் இருந்தது. மாறுபட்ட கருத்தோடு தம்

18