பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்


குளிப்பதில்லை. நாள் கிழமை பாராமல் மாமிச உணவு சாப்பிடுவார். வேறு சாதிக்காரர்கள் வீட்டில் எது கிடைத்தாலும் ஆசையாகச் சாப்பிடுவார். இதனால் அவருடைய தாயார் அவரைத் தொடக்கூடமாட்டார். தொட்டால் தீட்டு ஒட்டிக் கொண்டு விடுமாம். ஏதாவது தின்பண்டம் கொடுக்கும் போது மகன் கையில் தன் கை படாமல் உயரத்தில் தூக்கிப் போடுவார். இராமசாமியோ வேண்டும் என்றே அந்தக் கையை எட்டிப் பிடிப்பார். தீட்டு தீட்டு என்று சொல்லிக் கொண்டு குளித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பார் அவருடைய தாயார்.

மகனைப் போல் மருமகளும் மாறிவிடக் கூடாது என்பதில் சின்னத்தாயம்மாள் கவனமாக் இருந்தார். அவளை எப்படியும் மாற்றி விடுவது என்பதில். இராமசாமியார் தீவிரமாக இருத்தார்.

நாகம்மையார் நோன்பிருக்கும். தாளில்தான் மாமிச உணவு சமைக்கச் சொல்லி கட்டாயப்