பக்கம்:குமண வள்ளல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

குமண வள்ளல்

நான் பேசிக்கொண்டே இருக்கிறேனே; தயை செய்து இளைப்பாறுங்கள்.”

கட்டிலும் மெத்தையும் உள்ள இடத்தைக் காட்டினர் அதிகாரி. உண்மையில் களைப்பாகத்தான். இருந்தது புலவருக்கு படுக்கையில் படுத்தார்; தூங்கி, விட்டார்; நன்றாகத் தூங்கினார். கண் விழித்துப் பார்க்கையில் ஏவலாளன் ஒருவன் இனிய பானத்துடன் அருகே நின்றான். முகத்தைக் கழுவிக்கொண்டு அந்தப் பானத்தை உண்டார். உடனே அவரை உபசரித்த அதிகாரியும் வந்துவிட்டார்.

“எங்கள் மன்னருக்குத் தங்கள் வரவைச் சொன்னேன். புதிய புலவர் ஒருவரைத் தெரிந்துகொள்வது என்றால் அவருக்கு எப்போதுமே மிக்க விருப்பம். தங்களைக் காணவேண்டும் என்று காத்திருக்கிறார்” என்றார்.

“அப்படியா என்னை முன்பே எழுப்பியிருக்கலாமே!”

“தாங்கள் அயர்ந்து தூங்கும்போது எழுப்பலாமா? என்ன அவசரம்? எப்படியும் தாங்கள் இங்கே வந்தாயிற்று, ஓய்வாகப் பார்த்துப் பேசி இன்புறலாம் என்ற எண்ணத்தால் தங்கள் தூக்கத்தைக் கலைக்கவில்லை. இப்போது மன்னரைக் காணலாமா?”

“கரும்பு தின்னக் கூலியா?” என்று வியந்த ஆடியே புலவர் குமணனைக் காண எழுந்தார். அவனைக் காணும்போது அவர் ஏதேனும் கையுறை கொண்டு செல்லவேண்டாமா? பழமும் பண்டமும் கொண்டு மன்னரைக் காண்பது குடிமக்கள் செயல்ரிடம் எல்லாவற்றிற்கும் மேற்பட்ட தமிழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/22&oldid=1361708" இலிருந்து மீள்விக்கப்பட்டது