பக்கம்:மாயக் கள்ளன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சில பேர் பூக்களை எடுத்துக்கொண்டு மலைமேல் ஏறிக் கொண்டிருந்தார்கள். மலையுச்சிபிலே பாருக்கோ அவற்றைக் கொடுப்பதற்குத்தான் கொண்டுபோகிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் பூவாக உருவெடுத்துக் கொள்ள அவன் நினைத்தான். தாமரை, மல்லிகை, முல்லை, ரோஜா முதலான மலர்களை அவர்கள் கொண்டுசென்றார்கள். அவர்கள் கையில் இல்லாத ஒரு பூவாக உருவமெடுக்க வேண்டுமென்று ஆத்மரங்கனுக்குத் தோன்றியது. உடனே, கனகாம்பரப் பூவாக அவன் வழியிலே குலுங்கிக் கொண்டு நின்றான். . ஆனால், மலைமேல் ஏறிக் ஆக கொண்டிருந்தவர்களில் ஒரு ஒருவராவது அந்தப் பூவைத் தொடவில்லை. பூவுக்கு ஏக்கம் பிடித்துக் கொண்டது. ஏக்கத்தால் அது வாடத் தொடங் கியது. | 100 அந்தச் சமயத்திலே ஒரு குரங்கு அங்கே மரக் கிளைகளில் தாவித் தாவி வந்து சேர்த்தது. அது கனகாம்பரப் பூவைப் பார்த்ததும் ஆவலோடு + அதைப் பறித்தது. ஏதோ நீளமான ஒரு பச்சைக் கொடியைப் பிடுங்கி, அதைத் தன் தலையிலே சுற்றி அதிலே பூவைச் செருகிக் கொண்டது. பூவுக்கும் அதைக் கண்டு முதலில் மகிழ்ச்சியாக இருந்தது. “இந்த அழகான குரங்குக்குப் பொருத்தமான அழகான பூ தான்தான் ” என்று பெருமைப் பட்டது. ஆனால், சற்று நேரத்திலே, குரங்கு தனது குரங்குப் புத்தி பைக் காண்பிக்க ஆரம்பித்தது. மலையின் ஒரு பக்கத்திலே ஒரு 'கிடுகிடு' பாதாளம் இருந்தது. அதற்குள் சாய்ந்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/8&oldid=1276950" இலிருந்து மீள்விக்கப்பட்டது