பக்கம்:மாயக் கள்ளன்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பூவும் பாம்பும் ஆத்மரங்கன் என்று ஒரு வேடிக்கையான ஆள் இருந்தான். “ஆத்மரங்கா, நீ எந்த ஊர் ?” என்று கேட்டால், “எனக்கு ஊரே கிடையாது ; எல்லாம் என்னுடைய ஊர்தான்” என்று சொல்லுவான். * நீ எந்த ஊரிலிருந்து வந்தாய்?" என்று கேட்டால், “தெரியாது, நான் எங்கெங்கோ, எப்படி எப்படியோ போய்விட்டுக் கடைசியிலே கரு வூரிலிருந்து இங்கே வந்தேன். என் சொந்த ஊர் தெரியாது" என்று சொல்லுவான். "ஊர் தெரியாவிட்டால் போகிறது, உன் தாய் தகப்பன் யார் ? அவர்களை யாவது சொல்லு” என்று பாரா வது கேட்பார்கள். “தாபாரும் தெரியாது, தகப்பனாரும் தெரி யாது. அவர்களை நான் பார்த்த தாகக்கூட நினைப்பில்லை” என்று பதில் சொல்லுவான். தென் இப்படி அவன் பேசுவதைக் கேட்டுத்தான் அவனை ஒரு வேடிக்கையான பிறவி என்று எல்லோரும் கூறுவார்கள். அவர்கள் கூறுவது உண்மைதான். ஆத்மரங்கனைப் போல விசித்திரமான பிறவியே கிடையாது. ஆத்மரங்கனுக்கு அவனுடைய தாய் தந்தையரைப்பற்றித் தெரியாவிட்டாலும் அவர்களை எப்படியாவது பார்க்க வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/4&oldid=1276947" இலிருந்து மீள்விக்கப்பட்டது